பணிப் பெண்ணுக்கு சித்திரவதை-கைதான பாஜக பெண் பிரமுகரை 14 நாள் காவலில் விசாரிக்க அனுமதி

பணிப் பெண்ணுக்கு சித்திரவதை-பாஜக பெண் தலைவரை 14 நாள் போலீஸ் காவல் வீட்டு வேலை செய்த பழங்குடியின பெண்ணை கொடூர சித்ரவதைக்கு ஆளாக்கிய மூத்த பாஜக பெண் தலைவர் சீமா பத்ராவை காவல் துறையினர்…

பணிப் பெண்ணுக்கு சித்திரவதை-பாஜக பெண் தலைவரை 14 நாள் போலீஸ் காவல்
வீட்டு வேலை செய்த பழங்குடியின பெண்ணை கொடூர சித்ரவதைக்கு ஆளாக்கிய மூத்த பாஜக பெண் தலைவர் சீமா பத்ராவை காவல் துறையினர் கைது செய்தனர். அவரை 14 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சி நகரை சேர்ந்த சீமா பத்ரா, முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியான மகேஷ்வர் பத்ராவின் மனைவி. பாஜகவின் மூத்த தலைவராக இருந்து வருகிறார்.

இந்நிலையில், சீமா பத்ரா மீது அவரது வீட்டு பெண் பணியாளர் சுனிதா என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.

அந்த புகாரில், சீமா பத்ராவின் வீட்டில் பணியாளராக வேலை செய்து வருகிறேன். அவரது வீட்டில் உள்ள கழிப்பறையை நாக்கால் சுத்தம் செய்ய வைத்து கொடுமை செய்துள்ளார் என தெரிவித்து உள்ளார். மேலும், சுனிதாவின் உடலில் பல இடங்களில் காயங்கள் உள்ளன. சூடான பொருட்களை கொண்டு அவரது உடலில் சீமா பத்ரா சூடு வைத்துள்ளார் என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சீமா பத்ராவை பாஜக இடைநீக்கம் செய்தது. கைது செய்யப்பட்ட அவர் உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 14 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க உள்ளூர் நீதிமன்றம் உத்தரவிட்டார்.

இந்நிலையில், தனக்கு எதிரான குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றும் சீமா பத்ரா தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.