கீர்த்தி சுரேஷின் குட்லக் சகி படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நடிகை கீர்த்தி சுரேஷ் தெலுங்கில் ‘குட்லக் சகி’ படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் வெளியீட்டு தேதியை தற்போது படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தினை நாகேஷ் குக்குனூர் இயக்கியுள்ளார். ஜகபதி பாபு, ஆதி உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.
’குட்லக் சகி’ படப்பிடிப்பு கடந்த 2019-ஆம் ஆண்டு துவங்கியது. படப்பிடிப்பு விரைவாக முடித்தாலும், கொரோனாவால் இரண்டு ஆண்டுகளாக வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில், படத்தின் வெளியீட்டை உறுதி செய்துள்ளனர் படக்குழு.
సఖి వచ్చేస్తొంది ✨
We are so excited for you guys to see #GoodLuckSakhi in the theaters near you from 28th Jan 😊❤️#GoodLuckSakhiOn28thJan@AadhiOfficial #NageshKukunoor @ThisIsDSP #DilRaju @sudheerbza @shravyavarma @WorthAShotArts #VyshnaveeFilms @MangoMusicLabel pic.twitter.com/R21k9hqm3L
— Keerthy Suresh (@KeerthyOfficial) January 21, 2022
வரும் ஜனவரி 28-ஆம் தேதி ‘குட்லக் சகி’ தியேட்டர்களில் வெளியாகும் என நடிகை கீர்த்தி சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். ‘குட்லக் சகி’ தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழ் மற்றும் மலையாளத்திலும் வெளியாக உள்ளது.
Advertisement: