முக்கியச் செய்திகள் தமிழகம்

சென்னை கொளத்தூர் தொகுதியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

சென்னை கொளத்தூர் தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பெரம்பூர் கெளதமபுரத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் அடுக்கு மாடி குடியிருப்பில் 99 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் குழாய் அமைக்கும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். அப்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தொடர்ந்து, அசோக் அவென்யூ, ஜெகநாதன் சாலையில் மழைநீர் தேங்காமல் இருப்பதற்கு புதியதாக 990 மீட்டருக்கு 3 கோடியே 50 லட்ச ரூபாய் செலவில் நடைபெற்று வரும் மழை நீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகளை அவர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுப் பணிகளின் போது, நடந்து சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அப்பகுதி மக்களிடம் கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டார். அப்போது சிலர், முதலமைச்சருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அவர்களிடம் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுரை வழங்கினார்.

ஜி.கே.எம் காலனியில் 40 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நீரேற்று நிலையம் அமைக்கும் பணி, நேதாஜி நகரில் 2 கோடியே 36 லட்ச ரூபாய் செலவில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி, அஞ்சுகம் நகர் பகுதியில் 6 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி உள்ளிட்டவற்றையும் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.

Advertisement:
SHARE

Related posts

மக்களை ஏமாற்றுபவர்களை ஏப்- 6 மக்கள் ஏமாற்றுவார்கள்: மு.க.ஸ்டாலின்

Ezhilarasan

ஆந்திர மாநில எம்எல்ஏ ரோஜா, முதலமைச்சர் ஸ்டாலினுடன் திடீர் சந்திப்பு .

Halley Karthik

ஆஸ்கர் தேதி அறிவிப்பு!