தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 494 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
நேற்று வரை மொத்தம் 5024 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இன்று 537 பேர் மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பினர்.
இன்று கொரோனாவால் யாரும் உயிரிழப்பு இல்லை .ஒட்டுமொத்தமாக இன்றைய நிலவரப்படி 5161 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிகபட்சமாக சென்னையில் 75 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.அடுத்தபடியாக கோயபுத்தூர் 64 பேர், சேலத்தில் 33 பேர் செங்கல்பட்டு 33 பேர் இன்று பாதிக்கப்பட்டுள்ளனர்.
இத்தகவல் தமிழ் நாடு சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் கடந்த சில தினங்களாக குறைந்து வருகிறது. எனினும், தடுப்பூசிகளும், பூஸ்டர் டோஸ் போடும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
கொரோனாவிலிருந்து தற்காத்துக் கொள்ள முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.







