சென்னை மக்கள் தங்கள் வீடுகளில் மூவர்ண கொடியினை ஏற்றி வைக்க மேயர் பிரியா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வருகின்ற ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை பொதுமக்கள் தங்கள் வீடுகளில் மூவர்ண தேசிய கொடியினை ஏற்றி வைக்க வேண்டும் என மாநகராட்சி மேயர் பிரியா வேண்டுகோள் விடுத்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
ஆகஸ்ட் 13, 14, 15 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடியிருப்புகளிலும் தேசியக் கொடியை ஏற்றவும் பொதுமக்களுக்கு அதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் கடந்த 27ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதில், உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் தங்கள் பகுதிகளில் தேவையான அளவு தேசியக் கொடி இருப்பு இருப்பதை வியாபாரிகள் மற்றும் சுயஉதவிக் குழுக்களிடம் உறுதி செய்யவும், பொதுமக்களுக்கு இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளிலும் இந்த 3 நாட்களும் மூவர்ண தேசியக் கொடியினை ஏற்றுவது தொடர்பாக மண்டலக் குழுத் தலைவர்கள், மண்டல அலுவலர்கள், வியாபார சங்கப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.