திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியலில், ஏப்ரல் மாதக் காணிக்கையாக, பக்தர்கள் 114 கோடி ரூபாய் செலுத்தியுள்ளனர்.
திருப்பதி திருமலையில், ஏழுமலையானை வழிபட்ட பிறகு பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்துவது வழக்கம். ஏப்ரல் மாதம் 20 லட்சத்து, 95 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையான வழிபட்ட பின்னர், 114 கோடியே 14 லட்சம் ரூபாய் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். மேலும், ஏப்ரல் மாதம் ஒரு கோடியே ஒரு லட்சம் லட்டுப் பிரசாதம் விற்பனை ஆகி உள்ளது. ஏழுமலையான் கோயிலில் கடந்த ஆண்டு மார்ச் முதல் ஒவ்வொரு மாதமும் நூறு கோடி ரூபாய்க்கும் அதிகமாக காணிக்கை பெறப்பட்டு வருகிறது.
- பி.ஜேம்ஸ் லிசா







