அண்ணாமலையார் கோயில் குளத்தில் வெப்பம் தாங்காமல் செத்து மிதக்கும் மீன்கள்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தீர்த்த குளத்தில், வெயிலின் வெப்பம் தாங்காமல் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் தினசரி…

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தீர்த்த குளத்தில், வெயிலின் வெப்பம் தாங்காமல் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் தினசரி ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.மேலும், கோயிலுக்கு வருபவர்கள் ராஜகோபுரம் எதிரே உள்ள குளத்தில் இறங்கி, தண்ணீர் தெளித்துக் கொண்டு கோயிலுக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில், வெயிலின் தாக்கத்தால் வெப்பம் தாங்காமல் குளத்தில் ஆயிரக்கணக்கான
மீன்கள் செத்து மிதக்கிறது. இதனால், கோயிலுக்கு வருபவர்கள் செத்து மிதக்கும் மீன்களால் ஏற்படும் துர்நாற்றத்தை சகித்துக் கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது  குறித்து நகராட்சி நிர்வாகத்திற்கும், அண்ணாமலையார் கோயில் நிர்வாகத்திற்கும் தகவல் அளித்தும் , எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பக்தர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

—-கு. பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.