டெல்லியில் ஜந்தர் மந்தரில் அத்துமீறி நுழைந்ததாக கைது செய்யப்பட்ட காக்ரோச் ஜனதா கட்சு நிர்வாகிகள் சவுரவ் தாஸ், அஷுதோஷ் ரங்கா இருவருக்கும் 5 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டதையடுத்து செந்தியாளர்களை சந்தித்த சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே,
சவுரவ் தாஸ் மற்றும் அஷுதோஷ் ரங்கா ஆகியோருக்கு 5 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் செய்த தவறு என்ன? ஜந்தர் மந்தரில் மூவர்ண கொடியை ஏற்றியதா?
எதிர்ப்பை நசுக்க வேண்டும் என்றால் அதிகாரப்பூர்வமாக எமர்ஜென்சியை அறிவியுங்கள், இப்படி கோழைத்தனமான வழிகளில் மறைந்து கொள்ளாதீர்கள் என விமர்சித்துள்ளார்.
தற்போது மத்திய அரசு அதிகாரப்பூர்வமற்ற எமர்ஜென்சியை அமல்படுத்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ள அவர், சவுரவ. தாஸ், அஷுதோஷ் ரங்கா ஆகியோரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்
மேலும் பிரதமர் மோடி தனது தோல்வியை அவராகவே எழுதிக் கொண்டிருக்கிறார் என்று கூறிய தீப்கே, தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு அதன் முடிவை எழுதும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்




