தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “முழுமுதற் கடவுளான எம்பெருமான் முருகனின் முதலாம் படைவீடான திருப்பரங்குன்ற மலைமீது அமைந்துள்ள தீபத்தூணில், திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் அமைந்துள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற லட்சக்கணக்கான முருக பக்தர்களின் வாழ்நாள் கனவையும் வழிபாட்டு உரிமையையும் சட்டத்தின் துணையுடன் நாம் மீட்டெடுத்துள்ளோம்! சிறுபான்மையினரின் வாக்குகளுக்காக திருப்பரங்குன்ற மலையை ‘சிக்கந்தர் மலை’யாக மாற்றி, இந்துக்களின் மத அடையாளங்களை அழிக்க முயன்ற அரசியல் தீயசக்திகளின் கூட்டுச்சதியை தர்மத்தின் துணையுடன் நாம் முறியடித்துள்ளோம்!
ஆம். பாரம்பரிய வழக்கத்தின்படி, திருப்பரங்குன்றத் திருக்கோயிலுக்குச் சொந்தமான தீபத்தூணில் இந்த வருடம் மட்டும் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என 2026 நவம்பர் 20 அன்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவை மதிக்காமல், முருக பக்தர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்திய தவெக அரசின் ஆணவத்தினை அழித்து, இன்று திருப்பரங்குன்றத் தீபத்தூணில் ஜெகஜோதியாக ஒளிரப்போகிறது கார்த்திகை தீபம்!
இன்று திருப்பரங்குன்றத் தீபத்தூணில் ஒளிரப்போவது வெறும் தீபமல்ல; முருக பக்தர்களின் வெற்றிச் சுடர்! ஆன்மீகத்தின் மீதும் அரசியலைமைப்பின் மீதும் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் வெளிப்பாடு!
எனவே, சில அரசியல் கட்சிகளின் சூழ்ச்சிகளால் இத்தனை ஆண்டுகளாக இருளில் மூழ்கியிருந்த தீபத்தூண் பிரகாசிக்கப் போவதை கொண்டாடும் விதமாகவும், இரும்புக்கரம் கொண்டு நீதியை நிலைநாட்டியுள்ள நீதித்துறைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் இன்று மாலை நமது இல்லங்களில் மாக்கோலம் இட்டு, அகல் விளக்குகள் ஏற்றுவோம்!
திருப்பரங்குன்ற மலையில் இன்று ஒளிரப் போகும் கார்த்திகை தீபத்தின் பேரொளி. உலகெங்கிலும் வாழும் முருக பக்தர்களின் இல்லங்களிலும் உள்ளங்களிலும் மகிழ்ச்சியையும் அமைதியையும் நிரப்பட்டும்! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




