“மணிகண்டா” படத்தின் இரண்டாவது பாடலை வெளியிட்டார் நடிகர் சூர்யா!

‘மணிகண்டா’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார்.

நடிகர் வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘மணிகண்டா’. ஐயப்ப சுவாமியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை ‘மாளிகைப்புரம்’ படத்தை இயக்கிய விஷ்ணு சசி சங்கர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் வைபவ் கதாநாயகனாக நடிக்க, மீனாட்சி கோவிந்தராஜன், அரவிந்த் ஆகாஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தாந்த்ரா பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக இயக்குநர் வெங்கட் பிரபு பணியாற்றியுள்ளார். பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார்..

இப்படத்தின் முதல் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இதனை தொடர்ந்து படத்தின் முதல் பாடலான ‘எந்த மலை சேவித்தாலும்’ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியானது. பிரேம்ஜி இசையமைத்த இப்பாடலைப் பிரபல பக்திப் பாடகர் வீரமணிதாசன் பாடியிருந்தார்.. இந்த நிலையில், ‘மணிகண்டா’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் தற்போது வெளியாகி உள்ளது. இந்த பாடலை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார். “கருப்பர் வந்தா அய்யன் வருவார்” என்ற இந்த லிரிக்கல் பாடலை வி.எம்.மகாலிங்கம் பாடியுள்ளார். பல்வேறு மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள ‘மணிகண்டா’, வரும் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.