பிரிட்டன் மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்ளுமாறு மும்பை டப்பாவாலாக்களுக்கு அந் நாட்டு தூதரகம் அழைப்பிதழ்களை அனுப்பியுள்ளது.
பிரிட்டன் மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழா வரும் 6-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் நிகழ்ச்சியில் பங்கேற்க மும்பையின் பிரபல டப்பாவாலாக்கள் சங்கத்திற்க்கு அழைப்பு வந்துள்ளது. மே 5-ம் தேதி டப்பாவாலாக்கள் மன்னருக்கு பரிசுகளை வழங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
முடிசூட்டு விழாவில் கலந்து கொள்ள இருக்கும் டப்பாவாலாக்கள் மன்னர் சார்லஸுக்கு தலைப்பாகை மற்றும் வார்காரி சமூகத்தினர் செய்த வேலைப்பாடுகள் நிறைந்த சால்வை வாங்கியுள்ளனர் என கூடுதல் தகவல் கிடைத்துள்ளது. 
இளவரசர் சார்லஸ் இந்தியா வந்தது முதல் டப்பாவாலா சங்கம் பிரிட்டிஷ் அரச குடும்பத்துடன் மிக நெருக்கமான உறவை பேணி வருகிறது. மன்னரது திருமணத்திற்கு இரண்டு டப்பாவாலாக்கள் அழைக்கப்பட்டிருந்தனர். இது டப்பாவாலாக்களுக்கு மரியாதையாக கருதப்பட்டது.
2003-ம் ஆண்டில், மூன்றாம் சார்லஸ் மும்பைக்கு வந்த போது டப்பாவாலாக்களை சந்தித்தார். பின் 2005 இல், டப்பாவாலாக்கள் 2 பேர் சார்லஸ் மற்றும் கமிலா பார்க்கர்-பவுல்ஸின் அரச திருமணத்தில் கலந்து கொண்டனர்.







