தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறையில் திரவுபதி அம்மன் தூக்கு தேரில்
எழுந்தருளினார்.
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அருகே உள்ள மருத்துவ குணியில்
திரவுபதி அம்மன் கோயில் உள்ளது. ஆடுதுறை வீரசோழன் ஆற்றிற்கு, திரௌபதி அம்மன் எழுந்தருளினார். அங்கு தீர்த்தவாரி கண்ட பிறகு, அங்கிருந்து அலங்கரிக்கப்பட்ட தூக்கு தேரில் எழுந்தருளினார். நூற்றுக்கும் மேற்பட்டோர் திரௌபதி அம்மன் தேரினை தோளில் சுமந்தவாறு தூக்கி வந்தனர்.
இந்நிலையில், தூக்குத் தேருக்கு முன்பாக செண்டை மேள இசைக்கேற்ப நாட்டியக்
குதிரையின் ஆட்டம், பத்துக்கும் மேற்பட்டோரின் நாதஸ்வர இன்னிசை, சிறுவர்கள்
முதல் இளைஞர்கள் வரை ஆட்டம் பாட்டம் என விழாவை அமர்க்களப்படுத்தினர் .
மேலும், ஆடுதுறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும்
மேற்பட்டோர், ஆங்காங்கே நின்றபடி தேரில் வரும் திரௌபதி அம்மனை
தரிசனம் செய்தனர்.
மேலும், அம்மன் வீதி உலாவில் அழகு காவடிகள் எடுத்து வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
செலுத்தினர். விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
—-கு.பாலமுருகன்







