அக்னிபாத் திட்டத்தை அரசியல் ஆக்க வேண்டாம் என தெரிவித்துள்ள புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன், நாட்டின் பாதுகாப்பிற்காக அரசு எடுக்கும் முடிவை ஏற்று கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், புதுச்சேரியை துய்மையாக வைத்து கொள்ளும் நோக்கத்தில், நேர்று முதல் 75 இடங்களில் தூய்மை பணி நடைபெற்ற வருகிறது என்றார். புதுச்சேரியில் தற்போது நாளுக்கு 30 பேருக்கு கொரோனா தொற்று ஏற்படுவதாகவும், இதனால் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆரம்பத்தில் குறைவாக தான் கொரோனா தொற்று எண்ணிக்கை ஆரம்பிக்கும் என தெரிவித்த அவர், அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கூறினார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மார்கெட் புதிதாக கட்டப்படுகிறது, இதனால் சாலையில் கடை வைப்பவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்படும், மேலும் அவர்களுக்கு ஏதேனும் கோரிக்கைகள் இருந்தால் நிறைவேற்றப்படும் என அவர் தெரிவித்தார்.
மேகதாது விவகாரத்தில் புதுச்சேரிக்கு கிடைக்க வேண்டிய பங்கு கிடைக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், மேகதாது கட்ட வேண்டாம் என்று அரசு கடிதம் அளித்துள்ளது இது குறித்து தெளிவான ஒரு விவதாம் நடத்த வேண்டும் என்றார். மேலும் அக்னி பாத் திட்டம் குறித்து ராணுவ தலைமை அதிகாரி பேட்டியளித்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர், நாட்டிற்கு இளை படை வேண்டும் என்பதே இந்த திட்டம் என விளக்கினார். எனவே, இதனை அரசியல் ஆக்குவதை விட நாட்டின் பாதுகாப்புகாக அரசாங்கம் எடுக்கும் ஒரு முடிவு என்ற எண்ணத்தோடு அனைவரும் அனுக வேண்டும் என்பதே எனது கருத்து என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
– இரா.நம்பிராஜன்