முக்கியச் செய்திகள்

பொதுக்குழு முன்னேற்பாடு பணிகள் தீவிரம்-பலத்த போலீஸ் பாதுகாப்பு!

அதிமுக பொதுக்குழு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னையை அடுத்த வானகரத்தில் நாளை அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில் பொது குழுவிற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பொதுக்குழு நடக்கக் கூடிய இடத்தில் முன்பாக 100 மீட்டர் தொலைவிலேயே இரும்புத் தகடுகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசாரின் பலத்த சோதனைக்குப் பிறகே வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. வழிநெடுகிலும் கட்டவுட் பேனர்கள் வைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

முதற்கட்டமாக 500க்கும் மேற்பட்ட போலீசார் பொதுக்குழு நடக்கக்கூடிய இடத்திற்கு
முன் குவிக்கப்பட்டு வருகின்றனர். ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க போலீசார் தொடர்ந்து தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பொதுகுழு நடக்கக்கூடிய இடத்திற்கு முன்பு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

திறக்கப்படுமா திருக்குறுங்குடி கோயில்?

Niruban Chakkaaravarthi

அதிமுகவில் நடைபெறும் பஞ்சாயத்துகளுக்கு ஓ.பி.எஸ்தான் பிள்ளையார் சுழி போட்டார்-ஆர்.பி. உதயகுமார்

Web Editor

பாஜகவிற்கு காஷ்மீர் பைல்ஸ் ! திமுகவிற்கு நெஞ்சுக்கு நீதி !

Halley Karthik