டோண்ட் லுக் அப் திரைப்படத்தை பாராட்டி கவிஞர் வைரமுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் ருசீகரமாக பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். இதற்கு அவரது ரசிகர்கள் அவர் பாணியிலேயே கவிதை எழுதி கமெண்ட் செய்து வருகின்றனர்.
பிரபல ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ மற்றும் நடிகை ஜெனிபர் லாரன்ஸ் நடிப்பில் உருவான திரைப்படம் டோண்ட் லுக் அப். கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதி இந்த திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த படமானது ஹாலிவுட் மட்டுமல்லாது பல்வேறு தரப்பினர் மத்தியிலும் அதிகப்படியான எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
வெளியான குறுகிய காலத்திலேயே நல்ல வரவேற்பை பெற்றதோடு நல்ல வசூலையும் பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படத்தை பார்த்த கவிஞர் வைரமுத்து மிகவும் ருசீகரமான பதிவு ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
விண்கோள் ஒன்று
மோதப்போவதால்
பூமி
சிதறப்போகிறதென்று
பதறிச் சொல்கிறார்கள்
நாசா விஞ்ஞானிகள்அமெரிக்க ஜனாதிபதி
சிகரெட் பிடித்துக்கொண்டே
சிரிக்கிறார்உலகம்
நகையாடுகிறதுகடைசியில்
அது நிகழ்ந்தே விடுகிறதுஅழகான ஆங்கிலப் படம்
Don't Look Up
(மேலே பார்க்காதே)நீங்கள் மேலே பாருங்கள் pic.twitter.com/vPRhvKJ4m0
— வைரமுத்து (@Vairamuthu) February 9, 2022
அவரின் பதிவில், “விண்கோள் ஒன்று மோதப்போவதால் பூமி சிதறப்போகிறதென்று பதறிச் சொல்கிறார்கள் நாசா விஞ்ஞானிகள்; அமெரிக்க ஜனாதிபதி சிகரெட் பிடித்துக்கொண்டே சிரிக்கிறார்; உலகம் நகையாடுகிறது கடைசியில் அது நிகழ்ந்தே விடுகிறது;
அழகான ஆங்கிலப் படம் Don’t Look Up (மேலே பார்க்காதே)” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலர் தங்களின் விருப்பத்திற்குறிய கவிஞரை பாராட்டியபடியே அவர் பாணியில் பல்வேறு கவிதைகளை எழுதி டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.