திருவள்ளூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் முதலாமாண்டு கல்லூரி மாணவர் உட்பட இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர்-செங்குன்றம் சாலையில் கல்லுாரி மாணவர்கள் தமிம்அன்சாரி அவரது நண்பர் நவீன் ஆகிய இருவரும் நேற்று இரவு 11 மணிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது செங்குன்றத்தில் இருந்து திருவள்ளூர் நோக்கி வந்த கன்டெய்னர் லாரி எதிர்பாராத விதமாக அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து நடந்ததும் லாரி ஓட்டுனர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து அங்கு வந்த போலீஸார் விசாரணையில் ஈடுபட்டனர் , மேலும் தப்பி ஓடிய லாரி ஓட்டுனரையும் தேடி வருகின்றனர்.







