முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

இந்தி திணிப்பை எதிர்த்து திமுக இளைஞரணி போராட்டம் அறிவிப்பு

இந்தி திணிப்பை எதிர்த்து வருகிற 15-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தப்படும் என திமுக இளைஞரணி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழ்நாட்டில் மறைமுகமாக இந்தி திணிக்கப்பட்டு வருவதாக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் மத்திய அரசு கல்வி, பணியிடங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் இந்தி திணிப்பை கொண்டு வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

இதனிடையே, இந்தி திணிப்புக்கு எதிராக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தி மொழியை மத்திய அரசு திணிக்க நினைத்தால் மொழிப்போர் உண்டாகும் என எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில், திமுக இளைஞரணி சார்பில் இந்தி திணிப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி மற்றும் மாணவர் அணி செயலாளர் எழிலரசன் ஆகியோர் இந்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். வருகிற 15-ம் தேதி தமிழ்நாட்டின் மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரே பொது நுழைவுத்தேர்வு திட்டத்தையும் கண்டித்து இந்த போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“இந்தியாவை முழுவனுக் காக்கனும் எங்கின் சமஸ்தானங்களை நம்மேன் காக்கனும்” – மலையாளத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

EZHILARASAN D

செங்கல்பட்டில் பாதிப்புகளை பார்வையிட வந்த மாவட்ட ஆட்சியரின் காரை வழிமறித்து பொதுமக்கள் வாக்குவாதம்!

Saravana

அதிமுக உள்கட்சி தேர்தல்: ஒபிஎஸ் – இபிஎஸ் வேட்புமனுக்கள் ஏற்பு

Arivazhagan Chinnasamy