தமிழகத்தில் விரைவில் டிஜிட்டல் கரன்சி-மத்திய இணை அமைச்சர்

தமிழகம் உள்பட நாடு முழுவதும் டிஜிட்டல் கரன்சியை பிரதமர் மோடி விரைவில் அறிமுகப்படுத்த உள்ளார் என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் காட் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் முன்னோடி வங்கி…

தமிழகம் உள்பட நாடு முழுவதும் டிஜிட்டல் கரன்சியை பிரதமர் மோடி விரைவில்
அறிமுகப்படுத்த உள்ளார் என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் காட்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் முன்னோடி வங்கி மூலம் நிதி
உள்ளடக்கம் தொடர்பான மதிப்பாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி
முன்னிலையில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் காட் தலைமையில்
நடைபெற்றது.

மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பினால் கடந்த 2018 – ம் ஆண்டு நம் நாட்டின் 112
பின்தங்கிய மாவட்டங்கள் தேர்வு செய்து முன்னேற விழையும் மாவட்டத் திட்டம்
தொடங்கி வைக்கப்பட்டது. மேற்படி 112 மாவட்டங்களில் தமிழகத்தில் விருதுநகர்
மற்றும் இராமநாதபுரம் மாவட்டம் தேர்வு செய்யப்பட்டது.

அதை தொடர்ந்து சுகாதாரம், கல்வி, வேளாண்மை மற்றும் நீர் வள ஆதாரங்கள் ,
அனைவருக்குமான நிதிச் சேவைகள் உள்ளிட்ட அடிப்படை உட்கட்டமைப்பு ஆகிய இனங்களில் தொடர்ந்து முன்னேற்றம் அடைவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகம் மூலமாக மேற்கொள்ளபட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று விருதுநகர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் நிதி
உள்ளடக்கம் குறித்த ஆய்வுக்கூட்டம், மத்திய நிதித்துறை இணை அமைச்சர் மரு.பகவத்
கரட் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் அனைத்து வங்கியாளர்கள்
மற்றும் பயனாளர்களுடான மதிப்பாய்வு கூட்டத்தில் மாவட்டத்தில் மத்திய அரசின்
திட்டங்களான பிரதம மந்திரி காப்பீடு மற்றும் ஓய்வூதிய திட்டம் , கல்வி கடன் ,
பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் தெருவோர கடை
வியாபாரிகளுக்கான கடன் திட்டம் ஆகிய திட்டங்கள் வங்கிகள் மூலமாக
செயல்படுத்தப்படுவது குறித்து விரிவாக ஆய்வு செய்தார்.

மேலும் ,விருதுநகர் மாவட்டத்தில் 111 கிராமங்களும் 100 சதவிகிதம் நிதி
மற்றும் சமூக பாதுகாப்பில் தன்னிறைவு பெற்ற கிராமமாக மத்திய நிதித்துறை இணை
அமைச்சர் அறிவித்தார் . இந்த திட்டத்தை விருதுநகர் மாவட்டத்தில்
செயல்படுத்துவதற்கு உறுதுணையாக இருந்து சிறப்பாக செயல்பட்ட 68 வங்கியாளர்களை
ஊக்கப்படுத்தும் விதமாக பாராட்டு சான்றிதழ்களை மத்திய நிதித்துறை இணை
அமைச்சர் அவர்கள் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதித்துறை இணை அமைச்சர் மரு.பகவத்
காட், “இந்தியாவில் விரைவில் டிஜிட்டல் கரன்சி திட்டத்தை பிரதமர் தொடங்கி
வைப்பார் . 75 வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு 75 டிஜிட்டல்
வங்கிகளை பிரதமர் தொடங்கி வைத்தார். மேலும் 250 ஆண்டுகள் நம்மை ஆண்ட பிரிட்டிஷ்காரர்களை விட 75 ஆண்டுகளில் நாம் பொருளாதாரத்தில் முன்னேறி உள்ளோம் என்றும் அமெரிக்கா, சீனா,ஜப்பான்,ஜெர்மன் ஆகிய நாடுகளுக்கு அடுத்தப்படியாக நாம் பொருளாதாரத்தில் முன்னேறி 5 ஆவது இடத்தில் உள்ளோம்” என்றார்.

பிரதமரின் ஆத்மநிர்பார் திட்டம் மிகவும் பயனுள்ள திட்டமாக இருக்கிறது என்றும் இத்திட்டத்தில் நிராகரிக்கப்பட்ட மனுக்களையும் மறுபரிசீலனை செய்து அவர்களுக்கும் வங்கிக்கடன் கொடுக்க வங்கியாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.