திமுக இளைஞரணி மாநாடு டிசம்பர் 24-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

சேலத்தில் நடைபெறவிருந்த திமுக இளைஞரணி 2-வது மாநில மாநாடு டிசம்பர் 24-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2007-ம் ஆண்டு டிசம்பர் 15 அன்று திமுக வரலாற்றில்…

சேலத்தில் நடைபெறவிருந்த திமுக இளைஞரணி 2-வது மாநில மாநாடு டிசம்பர் 24-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

2007-ம் ஆண்டு டிசம்பர் 15 அன்று திமுக வரலாற்றில் முத்திரைப் பதித்து,  திருப்புமுனை ஏற்படுத்திய திமுக இளைஞர் அணி முதல் மாநில மாநாட்டினை தொடர்ந்து,  வரும் டிசம்பர் 17, 2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று திமுக இளைஞர் அணி 2-வது மாநில மாநாடு சேலத்தில் நடைபெறவிருந்தது.

இதையும் படியுங்கள்:  பொன்னேரியில் மின்சாரம் வழங்கக் கோரி பொதுமக்கள் மறியல்!

இந்த நிலையில் மழை காரணமாக ஒரு வாரக் காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  இந்த மாநாடு டிசம்பர் 24-ம் தேதி நடைபெற உள்ளது.  இதில் சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.