முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம்

’மக்கள் எதிர்பார்த்த மாற்றைத் தருவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது’: ஸ்டாலினுக்கு பாரதிராஜா வாழ்த்து!

தமிழக சட்டமன்றத்தேர்தலில் 138 தொகுதிகளில் வெற்றி பெற்று முதல்வராகப் பதவியேற்க உள்ள திமுக தலைவர் ஸ்டாலினுக்கு இயக்குநர் பாரதிராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 138 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக கூட்டணி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 70 இடங்களைக் கைப்பற்றியது. இந்நிலையில் முதல்வராகப் பதவியேற்க உள்ள மு.க.ஸ்டாலினுக்கு திரைத்துறை பிரபலங்களான நடிகர் சித்தார்த், ரஜினிகாந்த், தனுஷ், இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான், இயக்குநர் சீமான், இயக்குநர் ப.ரஞ்சித், இயக்குநர் பாரதிராஜா ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு:

”ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து ஓட்டளித்த அனைத்து தமிழக மக்களுக்கும் நன்றிகள் பகிரும் வேளையில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அரசுக்கும், முதல்வர் வேட்பாளராக வெற்றி பெற்றிருக்கும் நண்பர் திரு.மு.க ஸ்டாலின் அவர்களுக்கும் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சென்னை மாநகர மேயராகப் பணியாற்றிய போது மிகச் சிறந்த நிர்வாகியைக் கண்டிருக்கிறோம். அதே போல் புதிய மாற்றங்களைக் கொண்டு வரும் நிர்வாகத்தை தங்களின் தலைமையில் அமைய உள்ள அரசிடமிருந்து எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்.

தந்தையின் வழியில் தமிழின் மேன்மைகளைப் பாதுகாத்து, தமிழக உரிமைகளை மீட்டெடுத்து, தமிழையும் தமிழர்களையும் காக்க வேண்டிய பொறுப்பை முதன்மையானதாக எடுத்துக் கொள்ள தங்களைக் கேட்டுக் கொள்கிறேன். திரைத்துறை சார்ந்த நலங்களை இன்னும் சிறப்பாக்குவீர்கள் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.
மக்கள் எதிர்பார்த்த பெரிய ஒரு மாற்றத்தைத் தருவீர்கள் என்ற நம்பிக்கையும் உள்ளது.கொரானா காலகட்டம். மிகவும் சவாலான நாட்கள் தங்கள் முன் நிற்கிறது. பொருளாதாரப் பிரச்சனைகளைச் சரிசெய்து மக்களைப் பாதுகாக்க, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள உங்களை எதிர் நோக்கி நிற்கிறோம்.

உங்கள் வெற்றி பல நல்லவற்றைத் தமிழகத்திற்குக் கொண்டு வரட்டும். மக்களின் பக்கம் நின்று பார்க்கும் தன்மை உங்களுக்கு அதிகம் உண்டு என்பதால் நல்லாட்சியை எதிர்பார்த்து மனம் நிறை மகிழ்வுடன் எனது வாழ்த்துகளைத் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாகத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement:

Related posts

கல்வான் மோதலில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கான விருதுகள்!

Jayapriya

பாடகி ரிஹானாவை புகழும் ட்வீட்டுகளுக்கு லைக் செய்த ட்விட்டர் நிறுவனத் தலைவர் ஜாக் டோர்சே!

Jayapriya

விவசாயத்துக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாக முதல்வர் பரப்புரை!

Gayathri Venkatesan