இஸ்லாமிய சகோதரர்களுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்- கே.எஸ்.சரவணகுமார்!

இஸ்லாமிய சகோதரர்களுக்கு திமுக என்றும் உறுதுணையாக இருக்கும் என பெரியகுளம் திமுக வேட்பாளர் கே.எஸ்.சரவணகுமார் உறுதி அளித்துள்ளார். தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளராக கே.எஸ்.சரவணகுமார் போட்டியிடுகிறார். இந்நிலையில் பெரியகுளம் வடகரை…

இஸ்லாமிய சகோதரர்களுக்கு திமுக என்றும் உறுதுணையாக இருக்கும் என பெரியகுளம் திமுக வேட்பாளர் கே.எஸ்.சரவணகுமார் உறுதி அளித்துள்ளார்.

தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளராக கே.எஸ்.சரவணகுமார் போட்டியிடுகிறார். இந்நிலையில் பெரியகுளம் வடகரை 1வது வார்டு முதல் 15-வது வார்டு வரை தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது இஸ்லாமியர் அதிகம் வசிக்கக்கூடிய பழைய பேருந்து நிலையத்தில் பரப்புரையில் ஈடுபட்டார். அங்கு பேசிய அவர், தலைவர் ஸ்டாலின் அவர்கள் கொடுத்துள்ள வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என கூறினார்.

மேலும், இஸ்லாமிய சகோதரர்களுக்கு திமுக என்றும் உறுதுணையாக இருக்கும் என்றும் உங்களுக்காக நான் உயிரையும் கொடுப்பேன் என்றும் கூறினார். மேலும் பேசிய அவர், இஸ்லாமியர்கள் அனைவரும் அவருடைய தொப்புள் கொடி உறவு என மனதை உருக்கும் பேச்சால் இஸ்லாமியர்களிடமிருந்து வெகுவான பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் பெற்றார். இதனையடுத்து, பெரியகுளம் பகுதியில் தொடர்ந்து பரப்புரையிக் ஈடுபட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.