திருச்செங்கோடு தொகுதி அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக, திரைப்பட இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், தீவிரப் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பொன் சரஸ்வதியை ஆதரித்து, மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கருமாபுரம், கூத்தாநத்தம், செம்பகமகாதேவி பகுதிகளில் திரைப்பட இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் தேர்தல் பரப்பரையில் ஈடுபட்டார். தேர்தல் பரப்புரைக்கு சென்ற இடத்தில் பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். அப்போது அவர் பேசுகையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வழியில் ஆட்சி நடத்தும் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு என பல சிறப்பு திட்டங்களை வழங்கிவருகிறார்.
பெண்களுக்கு ரூ.1,500 மற்றும் வருடத்திற்கு 5 சிலிண்டர்கள் என ஏராளமான திட்டங்களை அறிவித்துள்ளார். சாலையில் புதுப்பித்தல் உள்ளிட்ட பல திட்டங்களை கொண்டு வந்துள்ளார். அதை எண்ணிப் பார்த்து அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டுமெனவும் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பொன் சரஸ்வதிக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து மீண்டும் அவரை வெற்றி பெறச் செய்யவேண்டும் எனவும் வாக்குகள் சேகரித்தார்.
அதனைத் தொடர்ந்து திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினரும் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளர் மணப்பெண் சரஸ்வதி கூறும் போதும் கொரோனா காலகட்டத்தில் கிராமபுறங்களில் நிறுத்தப்பட்ட பேருந்துகளை இயக்க இரண்டு தினங்களில் நடவடிக்கை எடுப்பதாகவும், பொது மக்களின் சிரமங்களைக் குறைக்க கூடுதலாக பேருந்துகளை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இந்த தேர்தல் பரப்புரையில் பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் பேரூராட்சி ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.







