நியூஸ் 7 தமிழ் ஒரு சிறப்பான முன்னெடுப்பான நிகரென கொள் உறுதி மொழி ஒரு சிறப்பான முன்னெடுப்பாகும். எல்லா ஆண்களும் இந்த உறுதிமொழியை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும் என நடிகர் பிரேம்குமார் தெரிவித்தார்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நியூஸ் 7 தமிழ் சார்பில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில், ”நிகரென கொள்-2023” என்ற தலைப்பில் விழிப்புணர்வு இயக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் கையெழுத்து இயக்கம், கருத்தரங்கம், உறுதிமொழி ஏற்பு போன்ற நிகழ்வுகளை நடத்துகிறது. இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நியூஸ் 7 தமிழ் அலுவலகத்தில் மார்ச் 1ம் தேதி நடைபெற்றது.
இந்நிலையில் சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேப்பில் நடிகர் பிரேம்குமார் நிகரென கொள் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்து, உறுதிமொழி எடுத்துக்கொண்டார். தொடர்ந்து நியூஸ் 7 தமிழுக்கு பேட்டி அளித்த அவர், இது அருமையான உறுதிமொழி. இதை அனைவரும் கட்டாயம் எடுக்க வேண்டும். இதை பின்பற்றினால் நம் சமுதாயம், நாடு முன்னேற்ற பாதைக்கு செல்லும். இது வெறும் வார்த்தைகள் அல்ல உணர்வுபூர்வமான பேச்சு என்று கூறினார்.








