தேர்தலில் வெற்றிபெற்று 7வது முறை திமுக ஆட்சி அமையும் – முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு..!

சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று 7வது முறையும் திமுக ஆட்சி அமையும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பொன்னேரியில் திமுக வடக்கு மண்டல 47 தொகுதி வாக்குச்சாவடி குழு பயிற்சி மாநாடு இன்று நடைபெற்றது.  இதில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.  நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது ;

தமிழகத்தின் நிரந்தர டிரெண்ட் கருப்பு, சிவப்புதான். உங்கள் நம்பிக்கையை பார்க்கும் போது அடுத்தும் திமுக ஆட்சிதான் என மக்கள் சொல்வது தெரிகிறது. சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று 7வது முறையும் திமுக ஆட்சி அமைக்கும். 200 தொகுதிகளில் திமுக வெல்வது நிச்சயம்.

2026 தேர்தல் இனி பல ஆண்டுகளுக்கு அரசியல் ஆய்வாளர்கள் பேசும் வரலாற்று வெற்றியாக இருக்க வேண்டும். இதுவரை இல்லாத அளவுக்கு ஒவ்வொரு தொகுதியும் திமுகவின் கோட்டை என்று நிரூபித்து காட்ட வேண்டும். பாஜகவின் டப்பா எஞ்சின் முன்பு திராவிட மாடல் சூப்பர் பாஸ்ட் எஞ்சின் ஒருபோதும் தலைகுனியாது. நாம் போராடுவது தமிழ்நாட்டின் வெற்றிக்காகத்தான்.

மக்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து துரோகிகளுக்கு ஷாக் கொடுத்துள்ளோம். இதுதான் என ஸ்டைல். தமிழ்நாடு என்ற பெயரையே மாற்ற வேண்டும் என நினைப்பவர்கள் வந்தால் சதித்திட்டம் எப்படி இருக்கும். பாஜகவின் கிளை அமைப்பாக அதிமுக மாறிவிட்டது.

தமிழ்நாட்டு அணியா? டெல்லி அணியா? எனும் போரில் விருப்பு வெறுப்பின்றி கூட்டணியை ஆதரிக்க வேண்டும். நம் இலக்கு 200 தொகுதிகள், அதற்கு தேவை ஓய்வில்லாத உழைப்பு.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.