தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் ஆறு தொகுதிகள் அறிவிக்கப்பட்டள்ளன.

சட்டமன்ற தேர்தலில் தனி சின்னத்தில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வானூர் (தனி) , காட்டுமன்னார்கோவில் (தனி), செய்யூர் (தனி), அரக்கோணம் (தனி), திருப்போரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய தொகுதிகளில் விசிக போட்டியிடுகிறது.
நான்கு தனித் தொகுதிகளிலும் இரண்டு பொது தொகுதியிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடுகிறது. இதில் குறிப்பாக திருப்போரூர் தொகுதியில், பாமக-வை எதிர்த்து விசிக நேரடியாக களம் இறங்குகிறது







