முக்கியச் செய்திகள் தமிழகம்

’எம்.ஜிஆருக்கு களங்கம் ஏற்படுத்துவதை திமுக கைவிட வேண்டும்’ – ஓபிஎஸ்

எம்.ஜிஆருக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சியை திமுக அரசு கைவிட வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

வரலாற்றை திரித்து எழுதுவதன் மூலம், எம்.ஜி.ஆரின் புகழை சிறுமைப்படுத்துவது கண்டனத்துக்குரியது என்றும், இது போன்ற முயற்சியை திமுக அரசு கைவிட வேண்டும் எனவும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எம்.ஜி.ஆர். பிறந்தநாளையொட்டி வெளியான தமிழ்நாடு அரசின் செய்திக்குறிப்பில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி திரைக்கதை, வசனம் எழுதிய படங்களின் வாயிலாக எம்.ஜி.ஆருக்கு தனியிடம் கிடைத்தது என்ற செய்தி உண்மைக்கு புறம்பானது என குறிப்பிட்டுள்ளார்.

திரையுலகில் எம்.ஜி.ஆர். கொடிக்கட்டிப் பறந்ததற்கு அவரது தனித்தன்மையே காரணம் என்றும், மக்கள்தான் அவருக்கு புரட்சித் தலைவர் என்று பெயர் சூட்டியதாகவும் தெரிவித்துள்ளார். அதே போன்று, எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருக்கும்போதே, தமிழ்நாடு மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டப்பட்டு சட்ட அங்கீகாரம் பெறப்பட்டுவிட்டதாகவும், கருணாநிதி தான் பெயர் சூட்டினார் என்பது பொய்யான தகவல் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வரலாற்றை திரித்து எழுதுவதன் மூலம், எம்.ஜி.ஆரின் புகழை சிறுமைப்படுத்துவது கண்டனத்துக்குரியது என்றும், இது போன்ற முயற்சியை திமுக அரசு கைவிட வேண்டும் எனவும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

”விடியாஅரசே! புரட்சித்தலைவரின் வரலாற்றை மாற்றி எழுத துடிக்காதே” என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டில் பாஜக தலைமையை நிரப்பப்போவது யார்?

Halley Karthik

தமிழகத்தில் சாதனையான ஆட்சி தொடர அதிமுகவுக்கு வாக்களியுங்கள்: கடம்பூர் ராஜூ

Halley Karthik

அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது: பழனிசாமி

Saravana Kumar