முக்கியச் செய்திகள் தமிழகம்

”எம்.ஜிஆரை சொந்தம் கொண்டாட அதிமுகவினருக்கு மட்டுமே உரிமை உள்ளது”- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!

எம்.ஜிஆரை சொந்தம் கொண்டாடுவதற்கு அதிமுகவினருக்கு மட்டுமே உரிமை உள்ளது என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் சோழவந்தானில் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், எம்எல்ஏ மாணிக்கம் ஆகியோர் 344 அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். மிதிவண்டிகள் வழங்கிய பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக நடத்துவது மக்கள் சபை கூட்டம் அல்ல அது திமுகவின் கட்சி கூட்டம் என விமர்சனம் செய்துள்ளார்.

எம்.ஜிஆரை வணங்குவதற்கு எல்லோருக்கும் உரிமை உண்டு எனவும், ஆனால் அவரை சொந்தம் கொண்டாடுவதற்கும், உரிமை கொண்டாடுவதற்கும், அவருடைய கொள்கைகளை, லட்சியத்தை, திட்டத்தை மக்களிடம் எடுத்துச் செல்லும் உரிமை அதிமுகவினருக்கு மட்டுமே உள்ளது என்றும் தெரிவித்தார். அதிமுக என்ற பசுமையான நிலத்தை பார்த்து ரசிக்க மட்டுமே முடியும், அதற்கு பட்டாதாரர் அதிமுகவினர் தான். வேடிக்கை பார்ப்பவர்கள் சொந்தம் கொண்டாட முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க கரும்பு கொள்முதல் செய்ததால் விவசாயிகளுக்கு தமிழக அரசு நன்மை செய்துள்ளதாக தெரிவித்தார். இது பிடிக்காதவர்கள் விவசாயிகளும் கமிஷன் பெறுவதாக அவதூறு பரப்புகின்றனர் என குற்றஞ்சாட்டினார்.

Advertisement:

Related posts

‘நல்ல சிகிச்சை கிடைத்தால் பிழைப்பேன்’: உதவி கேட்ட நடிகர் கொரோனாவுக்கு பலி!

Karthick

புனித தலங்களுக்கு பேருந்து வசதிகள் செய்து தரப்படும்:பூண்டி வெங்கடேசன்!

Karthick

“தமிழக சகோதர சகோதரிகளுக்கு புத்தாண்டு வாழ்த்துகள்” – பிரதமர் மோடி ட்வீட்

Gayathri Venkatesan

Leave a Reply