“தனிநாடு குறித்து திமுக கனவில் கூட நினைத்து பார்க்கக் கூடாது”- அண்ணாமலை

ஆதார் இருக்கும் போது மக்கள் ஐ.டி எதற்காக கொண்டு வர வேண்டும்? என்றும், தனிநாட்டிற்கான அடித்தளம் குறித்து திமுக கனவில் கூட நினைத்து பார்க்கக் கூடாது என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். …

ஆதார் இருக்கும் போது மக்கள் ஐ.டி எதற்காக கொண்டு வர வேண்டும்? என்றும், தனிநாட்டிற்கான அடித்தளம் குறித்து திமுக கனவில் கூட நினைத்து பார்க்கக் கூடாது என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், விருகம்பாக்கத்தில் பெண் காவலர் மீது திமுகவினர் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். ஆளுங்கட்சி இரண்டு நாட்களுக்கு பிறகு ஒப்புக் கொண்டுள்ளனர். இது குறித்து சென்னை காவல் ஆணையர் விவரிக்க வேண்டும். திராவிடல் மாடல் அரசு என சொல்கிறோம். ஆனால் புதுக்கோட்டையில் தொடர்ந்து தீண்டாமை பிரச்னை நடந்து வருகிறது.

புதுக்கோட்டையில் குற்றம் செய்தவர் யார் என கண்டு பிடிக்கப்பட்டுள்ளதா? தீண்டாமை குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? திமுக ஜாதி ஆதிக்கம் இருக்கும் கட்சி என்பது புதுக்கோட்டை சம்பவங்கள் எடுத்துரைக்கிறது. முன்னாள் எம்.பி. மஸ்தான் மறைவு குறித்து விசாரிக்க வேண்டும் என உயர்காவல் அதிகாரிக்கு தகவல் கூறினேன். திமுக ஆட்சிக்காலத்தில் முன்னாள் எம்.பி.க்கே பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.

கட்சியில் இருந்து யார் வெளியேறினாலும் அவர்களை வாழ்த்தி வழி அனுப்புவது தான் என்னுடைய பழக்கம். காயத்திரி ரகுராம் தன்னுடைய கருத்தை கூறுகிறார். மகளிர்கள் அதிகளவில் இருக்கும் கட்சி பாஜக. எந்த பத்திரிகைகள் என்னை பற்றி குற்றச்சாட்டுகள் வைத்தாலும் என்னுடைய பதில் மவுனம் தான். காயத்திரி ரகுராம் குற்றச்சாட்டுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், ஈஷா மையத்தின் மீது குற்றச்சாட்டு வைத்தால் அதற்கான ஆதாரத்தை வெளியிட வேண்டும். பெண் உயிரிழப்பு குறித்து காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பின்னர் பாஜக தலைவர் அண்ணாமலைக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் வாக்கவாதம் ஏற்பட்டது. குறிப்பிட்ட ஊடகம், பத்திரிகையாளர்கள் திமுகவுக்கு ஆதரவாக அஜெண்டாவுடன் செயல்படுகின்றன என அண்ணாமலை குற்றாம்சாட்டினார்.

சுப்பிரமணிய சுவாமியை சந்தித்து அவரிடம் பேசினால் அண்ணாமலை நல்லவன்.
சுப்பிரமணியன்சுவாமி அளிக்க கூடிய சான்றிதழ் எனக்கு தேவையில்லை என்றார். ஆதார் இருக்கும் போது மக்கள் ஐ.டி. எதற்காக கொண்டு வர வேண்டும்? தனி நாட்டிற்கான அடித்தளம் குறித்து திமுக கனவில் கூட நினைத்து பார்க்க கூடாது என அண்ணாமலை கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.