திமுகவை ஆட்சியை விட்டு விரட்டி அடிக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ் பேச்சு…..!

திமுகவை ஆட்சியை விட்டு விரட்டி அடிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார்.

பாமகவின் தலைவராக 2026ம் ஆண்டு ஆகஸ்ட் வரை அன்புமணி ராமதாஸ் தொடர்வார் என்ற பொதுக்குழுவின் தீர்மானத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை எதிர்த்து அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் ஆவணங்கள் அடிப்படையில் பாமக தலைவர் அன்புமணிதான் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் வாதத்தை டெல்லி உயர்நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டுள்ளது. இது ராமதாஸ் தரப்பிற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இன்று அன்புமணி தரப்பில் பாமகவின் மாநில இளைஞர் அணி பொதுக் குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், நிர்வாகிகள் மற்றும் ஏராளமான கட்சியினர் கலந்து கொண்டுள்ளனர்.

பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது ; இளைஞர்கள் உங்களை நம்பி தான் நம் கட்சி இருக்கிறது. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நீங்கள் அர்ப்பணிப்போடு பணியாற்ற வேண்டும். நம் கட்சிக்குள் உள்ள குழப்பங்கள் எல்லாம் உங்களுக்கும் தெரியும். யாரால் நடக்கிறது என்றும் உங்களுக்கு தெரியும்.

திமுகவை ஆட்சியை விட்டு விரட்டி அடிக்க வேண்டும். இனி தமிழ்நாட்டில் திமுக ஆட்சி நடைபெறக்கூடாது. அதனால் தான் நான்கு மாதத்திற்கு முன்பு தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் நடத்தினேன். அப்போது நான் திமுக செய்த ஊழல்களைப் பற்றி மக்களுக்கு எடுத்து சொன்னேன். திமுக பணத்தை மட்டுமே நம்பி உள்ளது, ஆனால் பாமகவிற்கு இளைஞர்களுடைய நம்பிக்கை உள்ளது. தேசிய கூட்டணி குறைந்தது 200 தொகுதிகளில் வெல்லும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.