முக்கியச் செய்திகள் தமிழகம்

திமுக ஆட்சி தமிழகத்தின் சாபக்கேடு- அண்ணாமலை

தமிழகத்தில் தற்போது நடந்து வரும் திமுக ஆட்சி தமிழகத்தின் சாபக்கேடு என்று
கரூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டியுள்ளார்.

கரூரில் மாவட்ட பாஜக சார்பில் நடைபெற்ற 100 காச நோயாளிகளுக்கு ஒரு வருடத்திற்கான ஊட்டச்சத்து உணவு பொருட்களை வழங்கும் நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கரூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவுகள் வழங்க பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுத்த பிறகு, திடீரென அந்த அனுமதியை ரத்து செய்த கரூர் மாவட்ட ஆட்சியரின் செயல் வருத்தம் அளிப்பதாக உள்ளது. இந்த விஷயத்தில் தேவையில்லாமல் அரசியல் பார்ப்பது வருத்தம் அளிக்கிறது.

பெட்ரோல் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தேசவிரோத வழக்கு பதிந்து, குண்டர் சட்டத்தில் உடனடியாக சம்பந்தப்பட்டவர்களை கைது செய்திருக்க வேண்டும். திமுக மத வாத கட்சியா? பாஜக மதவாத கட்சியா? என்று முதல்வர் தான் சொல்ல வேண்டும். ஒரு மத நிகழ்வுக்கு வாழ்த்து கூறுகிறார். மற்றொரு மத நிகழ்விற்கு வாழ்த்து கூற மறுக்கிறார். தமிழகத்தில் தற்போது நடந்து வரும் திமுக ஆட்சி தமிழகத்தின் சாபக்கேடு என்று கூறினார்.

திமுக எம்எல்ஏ பாஜகவில் இணைய உள்ளனர் என்ற கருத்து குறித்து கேள்வி கேட்டதற்கு, அனைத்து கமிஷனும் கோபாலபுரம் செல்வதால் தற்போது உள்ள எம்எல்ஏக்கள் விரக்தியில் உள்ளனர். ஆகையால் தான் எம்எல்ஏக்கள் எம்பிக்கள் நேரடியாக சென்று பொதுமக்களை மிரட்டி கமிஷன் கேட்கும் அளவிற்கு செல்கின்றனர் என்றார்.

ஆர்எஸ்எஸ் அமைப்பு இந்திய கலாசாரத்தை உலகம் முழுவதும் எடுத்து செல்லும் இயக்கம். 100 ஆண்டுகளை கடந்த இயக்கம். ஆர்எஸ்எஸ் இயக்கம் செய்த வேலைகளைப் பற்றி பார்ப்பதற்கு வட மாநிலங்களுக்கு ரயில்வே டிக்கெட் எடுத்து திருமாவளவன் மற்றும் கம்யூனிஸ்ட் இயக்க தோழர்கள் அனுப்பி வைக்கிறேன். அங்கு சென்று ஆர்எஸ்எஸ் செய்த வேலைகள் குறித்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். ஆர்எஸ்எஸ் அமைப்பில் இஸ்லாமிய நண்பர்கள் உள்ளன.

தமிழகத்தில் நடந்த பெட்ரோல் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு இதுவரை எந்தவித கண்டன அறிக்கையை முதல்வர் தெரிவிக்கவில்லை. ஆனால், பதிலுக்கு எங்கள் மீது பழியை சுமத்துகிறார். முதல்வர் அவ்வப்போது கும்பகர்ணன் போல் தூங்கிக் கொண்டிருக்கிறார். நாங்கள் அவரை தட்டி எழுப்பிகிறோம் என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மூன்று சிறுவர்கள் உயிரிழப்பு – மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் விளக்கம்

EZHILARASAN D

“7.5 சதவீத இடஒதுக்கீட்டால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு”

Web Editor

தமிழகத்திற்கான மண்ணெண்ணெய் அளவு 20% ஆக குறைப்பு!

EZHILARASAN D