முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

வாடிகன் செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவாக மாறிய ஸ்ரீபூமி பந்தல்

துர்கா பூஜையை முன்னிட்டு, இந்தியாவின் கலாச்சார தலைநகரமான கொல்கத்தாவின் ஸ்ரீபூமி பந்தல் வாடிகன் நகரின் செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்கா தீமில் அமைக்கப்பட்டுள்ளது.

துர்கா பூஜைக்குப்  பெயர்பெற்ற மாநிலம் மேற்குவங்கம் ஆகும். இப்பண்டிகையின் இந்த ஆண்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், துர்கா பூஜை நேற்று தொடங்கிவிட்டது. கொல்கத்தாவின் புகழ்பெற்ற பந்தல்களின் முதன்மையான ஸ்ரீபூமி பூஜை பந்தல், ஒவ்வொரு ஆண்டும் அதன் புதுமையான கருப்பொருளுக்காக (தீம்) அறியப்படுகிறது. இந்த ஆண்டு இந்தியாவின் கலாச்சார தலைநகரை வாடிகன் நகரின் செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவாக மாற்றியுள்ளனர். அதுவே இந்த வருடத்திற்கான கருப்பொருளாகும்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கொல்கத்தாவின் பிதான்நகரில் உள்ள ஸ்ரீபூமி பூஜை பந்தல் ஆண்டுதோறும் மிகவும் ஆக்கப்பூர்வமான கருப்பொருளைத் தேர்ந்தெடுக்கும் பிரபலமான பந்தலாகும். இந்த ஆண்டு வாடிகன் நகரத்தின் செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவை கருப்பொருளாகக் கொண்டு இப்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபூமி பூஜை பந்தல் இந்த ஆண்டு தனது 50ஆவது ஆண்டு பொன் விழாவையும் கொண்டாடுவது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து, மேற்கு வங்க தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் அமைச்சரும், ஸ்ரீபூமி ஸ்போர்ட்டிங் கிளப் தலைவருமான சுஜித் போஸ் அளித்த பேட்டியில், ரோமில் உள்ள வாடிகன் நகரத்தைப் பற்றி மக்கள் கேள்விப்பட்டிருக்கிறார்கள். ஆனாலும், சிலர் மட்டுமே அதைப் பார்க்க வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர். எனவே, வாடிகன் நகரத்திற்குச் செல்லும் மக்களின் விருப்பத்தை இந்த பந்தல் தீம் நிறைவேற்றும். 100க்கும் மேற்பட்ட கைவினைஞர்களின் உதவியுடன் இந்தப் பந்தல் 60 நாட்களில் செய்து முடிக்கப்பட்டுள்ளது என்றார்.

கடந்த ஆண்டு, ஸ்ரீபூமி பூஜை பந்தல் புர்ஜ் கலீஃபா  தீம் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்தது. துர்கா தேவி மகிஷாசுரனை வென்றதை நினைவுகூரும் வகையில் நாடு முழுவதும் இவ்விழா விமர்சியாக கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதேபோல, தெற்கு கொல்கத்தாவில் உள்ள தகுரியாவில் உள்ள பாபுபகன் சர்போஜனின் துர்கோத்சவ் பூஜை பந்தலில் சுதந்திரம் பெற்றதிலிருந்து வெளியிடப்பட்ட ஆயிரக்கணக்கான நினைவு நாணயங்களால் செய்யப்பட்ட ஒரு தனித்துவமான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு துர்கா பூஜை பந்தலின் தீம் “மா துஜே சலாம்”.

இந்த ஆண்டு பாபுபகன் சர்பஜனின் துர்கா பூஜை 61ஆவது ஆண்டாக கொண்டாடப்படுகிறது. நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவு கூரும் வகையில், மா துர்காவை வரவேற்று, நாட்டின் மகத்தான சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதுகுறித்து, கான்செப்ட் தயாரிப்பாளரும், பூஜை கமிட்டி பொருளாளருமான பேராசிரியர் சுஜாதா குப்தா கூறுகையில், “மா துஜே சலாம் என்பது இந்தப் பந்தலின் தீம். மா என்றால் ‘துர்கா மா’ மற்றும் ‘பாரத் மாதா’ என்றும் பொருள். இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைவதை இந்த ஆண்டு நாம் கொண்டாடுகிறோம். சுதந்திரத்திற்குப் பிறகு வெளியிடப்பட்ட ஆயிரக்கணக்கான நினைவு நாணயங்களால் இந்த பந்தல் உருவாக்கப்பட்டுள்ளது. 1947 முதல் இன்று வரை முக்கியமான சந்தர்ப்பங்களில் பல நினைவு நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அத்தகைய நாணயங்களை சேகரித்து இந்தப் பந்தலை அலங்கரித்துள்ளோம். சில நாணயங்கள் அசல், மீதமுள்ளவை பிரதிகள்.

துர்காமாவின் சிலைகள் நாணயங்களில் பிரதி எடுக்கப்பட்டுள்ளன. இவை நாணய அருங்காட்சியத்தில் வைக்கப்படும். மேலும், சுதந்திரப் போராட்ட வீரர்களான மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சுபாஷ் சந்திரபோஸ், சுவாமி விவேகானந்தர் போன்றோரின் பிரதிகளையும் நாணயங்களில் வைத்துள்ளோம்” என்றார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

யூரோ காலபந்து: பிரான்ஸ் அணியை வீழ்த்திய சுவிட்சர்லாந்து

2ஜி ஊழலை மக்கள் இன்னும் மறக்கவில்லை-அண்ணாமலை

Web Editor

குறைந்தது கடன்…உயர்ந்தது வருவாய்…தமிழ்நாடு நிதியமைச்சர் மகிழ்ச்சி…

Web Editor