அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெறும் 50 செவிலியர்களை வைத்து கொண்டு பயிற்சி நடத்துவது ஏன்? என்று கோபித்துக் கொண்டு நிகழ்ச்சியை விட்டு வெளியேறி சென்று விட்டார்.
சென்னையில் பல்வேறு இடங்களில் காய்ச்சலானது அதிகரித்து வருகிறது. மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம் காய்ச்சல் விழிப்புணர்வு கருத்தரங்கம் சென்னை சுகாதாரத்துறை பயிற்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியம் முன்னிலையில் நடக்கவிருந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிகழ்ச்சியில் அவர் பங்கேற்ற உடன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடி முடிக்கப்பட்டது. மேடையில் அமர்ந்ததும் வெறும் 50 செவிலியர்களை மட்டும் அமர்ந்திருந்ததை பார்த்து அமைச்சர் அதிர்ச்சி அடைந்தார். அங்கு இருக்கக்கூடிய செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் குறைவாக இருந்ததையடுத்து, நிகழ்ச்சியை பாதியிலேயே புறக்கணித்துவிட்டு அதிகாரிகளிடம் மிகக் கடுமையாக நிகழ்ச்சியை ரத்து செய்கிறேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.
மேலும் இதில் 1000 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இதில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு முழுவதும் இருந்து இங்கேஅந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்கள். இந்த நிகழ்ச்சியானது நடைபெறவில்லை என்பதனால் பெரும் அதிர்ச்சியை சந்தித்தனர்.
மேலும் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது.