முக்கியச் செய்திகள் தமிழகம்

“நெருக்கடியிலும் ஊழியர்களுக்கு முழு ஊதியம் வழங்கியது திமுகதான்” – அமைச்சர்

கொரோனா நெருக்கடியிலும் போக்குவரத்து ஊழியர்களுக்கு முறையான ஊதியத்தை வழங்கியது திமுகதான் என போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

“கடந்த 10 ஆண்டுகளாக போக்குவரத்துக் கழக தொழிலாளர்களை வஞ்சித்து , துன்புறுத்தியது அ.தி.மு.க.ஆட்சி. போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் நலன் பற்றி இன்று ஓ.பி.எஸ் அறிக்கை விடுவது ‘ சாத்தான் வேதம் ஓதுவது போல் இருந்தது’. திராவிட முன்னேற்றக் கழக அரசால், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் உருவாக்கப்பட்டது . ஆட்சிக்கு வந்த இரு மாதங்களில், கொரோனா நோய் தொற்று ஊரடங்கு காரணமாக , போக்குவரத்து நடைபெறாமல் பணியின்றி , நிர்வாகத்திற்கு வருமானமற்ற நிலையிலும், கடும் நிதி நெருக்கடியிலும் மாத ஊதியத்தை எவ்வித பிரச்சனையுமின்றி வழங்கியதை தொழிலாளர் சமுதாயம் நன்றியுடன் பாராட்டுகிறது.

அனைத்துப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் நலன் கருதி , பல்வேறு பணப் பலன்களாக ரூ .497.32 கோடியினை கருணை உள்ளத்தோடு வழங்கியவர் நம் தமிழ்நாடு முதலமைச்சர்.

உடல் நலம் குன்றியவர்கள் முறையான மருத்துவச் சான்றுகளின் பேரில் இலகுப் பணிகளில் தற்போதும் ஈடுபட்டு வருகின்றனர். உடல் நலம் குன்றியோர் யாரையும் பணி மாறுதல் செய்து திமுக அரசு துன்புறுத்தவில்லை. தொழிலாளர்களை , தொழிலாளர்களாகப் பாவிக்காத அரசு அதிமுக அரசு என்பதற்கு கடந்த 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் தொழிலாளர்கள் பட்ட வேதனைகளே சாட்சி.”
என தனது அறிக்கை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

கொரோனா பரிசோதனை செய்துகொண்ட 115 வயது மிட்டாய் தாத்தா!

உலக தண்ணீர் தினம்: மழை நீர் சேமிப்பு பிரச்சாரத்தைப் பிரதமர் மோடி தொடங்கிவைக்கிறார்

Ezhilarasan

நடிகர் விவேக்கிற்கு ரஜினிகாந்த இரங்கல்!

Gayathri Venkatesan