முக்கியச் செய்திகள் தமிழகம்

திமுக மட்டுமே இனி தமிழ்நாட்டை ஆட்சி செய்யும்: அமைச்சர் ராஜ கண்ணப்பன்

திமுக மட்டுமே இனி தமிழ்நாட்டை ஆட்சி செய்யும் என்று அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

குரோம்பேட்டையில் புதியதாக 17 வழித்தடங்களில் அரசு மாநகர பேருந்து சேவையை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் ”போக்குவரத்து தொழிலாளர்களுகான ஊதிய பேச்சு வார்த்தை அடுத்த மாதம் தொடங்கும். கடந்த ஆட்சியில் 12 ஆயிரம் பேருந்து மட்டுமே இயக்கப்பட்டது.திமுக ஆட்சியில் 17,000-க்கும் அதிகமாக பேருந்துகள் இயக்கப்படுகிறது. 4 ஆயிரம் புதிய மற்றும் நிறுத்தப்பட்ட சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இனி ஒரே திராவிட கட்சி மட்டுமே இருக்கும். திமுக மட்டுமே இனி தமிழ்நாட்டை ஆட்சி செய்யும்” என்று அவர் தெரிவித்தார். மேலும் பேசியவர் அவர் ” போக்குவரத்து ஊழியர்களுக்கு இனிப்புகள் வழங்குவதில் எந்த ஒரு தவறும் நடைபெறவில்லை.

கடந்த அதிமுக ஆட்சியில் ரூ.262-க்கு இனிப்புகள் வாங்கப்பட்டது. ஆனால் இந்த முறை ரூ. 230-க்கு அரசு நிறுவனமான ஆவினில் இனிப்புகள் கொள்முதல் செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். எனவே இதில் எந்த முறைகேடும் இல்லை. இதில் பாஜக தலைவர் அண்ணாமலை தவறான குற்றச்சாட்டை முன் வைக்கிறார். தீபாவளி பண்டிகைக்கு சென்னையில் ஆறு இடங்களில் இருந்து 16,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.மீண்டும் தீபாவளி முடிந்து சென்னை திரும்ப 17 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகிறது. தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் அதிகரிக்கப்படும்” என அமைச்சர் தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

பன்முகத்தன்மையே இந்தியாவின் அடையாளம்; பிரதமர் மோடி பெருமிதம்

Saravana Kumar

தினம் கூடுதலாக 2ஜிபி டேட்டா – டவுன்லோட்களுக்கு பஞ்சமில்லா புது ஆஃபர்

Jayapriya

”கமல்ஹாசன் தமிழகத்தில் சீரமைப்பதற்கு ஒன்றுமில்லை”- அமைச்சர் கடம்பூர் ராஜூ!

Jayapriya