பசும்பொன் கிராமத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீசுடன் மூன்றடுக்கு பாதுகாப்பு.

ராமநாதபுரம் பசும்பொன் கிராமத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீசுடன் மூன்றடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவர் 114 வது ஜெயந்தி விழா மற்றும் 59 வது குருபூஜை…

ராமநாதபுரம் பசும்பொன் கிராமத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீசுடன் மூன்றடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவர் 114 வது ஜெயந்தி விழா மற்றும் 59 வது குருபூஜை விழா அக்டோபர் 28, 29, 30 தினங்களில் நடைபெற உள்ளது. இதில் தமிழக முதல்வர் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பசும்பொன் கிராமத்திற்கு நேரில் வந்து முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மரியாதை செலுத்த உள்ளனர்

இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் சார்பில் பணிகள் நடைபெற்று வருகிறது இதையடுத்து முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மறைந்த முதலமைச்சரால் வழங்கப்பட்ட 13.5 கிலோ எடையுள்ள தங்கக் கவசம் இன்று மதுரை அண்ணாநகர் கிளையில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கியில் பாதுகாப்பு பெட்டகத்திலிருந்து எடுத்துவரப்பட்டு பசும்பொன்னில் முத்துராமலிங்கதேவர் நினைவிடத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அணிவிக்கப்பட்டது

இதையடுத்து துப்பாக்கி ஏந்திய போலீசார் 3 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது தேவர் ஜெயந்தி விழாவிற்கு பின்னர் நவம்பர் 1ஆம் தேதி மீண்டும் மதுரை அண்ணாநகர் கிளையில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கியில் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்படும்

பசும்பொன்னில் தங்கக் கவசத்தை அணிவிக்க வந்த முன்னாள் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்த போது பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் 2014ஆம் ஆண்டு தங்கக் கவசம் வைக்கப்பட்டதாகவும் இது பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படும் என்று கூறினார் பின்னர் செய்தியாளர்கள் சசிகலா சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருக்கும் சூழ்நிலையில் மீண்டும் அதிமுகவில் சேர்த்துக் கொள்வதற்கான வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு நான் ஒரு தொண்டன் எனக்கு தெரியாது என்று கேள்விக்கு பதிலளிக்க மறுத்து சென்றுவிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.