ரஜினி தாதாசாகேப் பால்கே விருது பெற்ற மேடையில் தேசிய விருது பெற்றது இரட்டிப்பு மகிழ்ச்சியாக உள்ளதாக நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.
67வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் விருதுகளை குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு வழங்கினார். இதில், திரைத்துறையின் மிக உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது நடிகர் ராஜினிக்கு வழங்கப்பட்டது. அதேபோல அசுரன் படத்தில் நடித்த நடிகர் தனுசுக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
விருது பெற்ற பின்னர் டெல்லியிலிருந்து விமானத்தில் சென்னை திரும்பினார் தனுஷ். அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர், “சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது மகிழ்ச்சியாக இருக்கிறது. ரஜினி தாதாசாகேப் பால்கே விருது வாங்கும் மேடையில் நானும் தேசிய விருது பெற்றது பெருமையாகவும் இரட்டிப்பு மகிழ்ச்சியாகவும் உள்ளது.
To my fans ❤️❤️❤️❤️❤️ pic.twitter.com/USEEJLRGFR
— Dhanush (@dhanushkraja) October 25, 2021
வெற்றிமாறனும் நானும் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பணியாற்றி வருகிறோம். எல்லா படங்களும் வெற்றியையும் வரவேற்பையும் எல்லா தரப்பிலும் பெற்று வருகிறது. 2 தேசிய விருதுகளும் வெற்றிமாறன் தந்த கதாபாத்திரம் மூலமாகதான் கிடைத்துள்ளது.
வெற்றிமாறனுக்கும் தாணுவிற்கும் தேசிய விருது குழுவிற்கும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் எனது ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.” என கூறினார்.