தேர்தல் அதிகாரி வாயிலாக திமுக முறைகேடு: அதிமுக ஒருங்கிணைப்பாளர் குற்றச்சாட்டு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தேர்தல் அதிகாரி வாயிலாக திமுகவினர் முறைகேடு செய்ததாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் குற்றஞ்சாட்டியுள்ளார். நடந்த முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவினர் தேர்தல் அதிகாரி வாயிலாக முறைகேட்டில் ஈடுபட்டார்கள்…

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தேர்தல் அதிகாரி வாயிலாக திமுகவினர் முறைகேடு செய்ததாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நடந்த முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவினர் தேர்தல் அதிகாரி வாயிலாக முறைகேட்டில் ஈடுபட்டார்கள் என்று குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி பேரூராட்சி தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் பழனி செல்வி வெற்றி பெற்றதாக கூறப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், அதற்கு மாறாக திமுக சார்பில் சுப்புலட்சுமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். சுயேட்சை வேட்பாளர் பழனிசெல்வி உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் மூலம் இது தெளிவாக தெரிவதாகவும் ஓபிஎஸ் குறிப்பிட்டுள்ளார்.


உயர் நீதிமன்றத்தில் ஆஜரான தேர்தல் அதிகாரியும், தனக்கு திமுகவினர் அழுத்தம் கொடுத்ததாக சொல்லி இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டு பணநாயகம் வெற்றி பெற்றிருப்பதாகவும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.