பெட்ரோல், டீசல் விலை உயராமல் மத்திய அரசு தடுக்க வேண்டும் – விக்கிரமராஜா

ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயராமல் பார்த்துக்கொள்ள மத்திய அரசு முன்வர வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின்…

ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயராமல் பார்த்துக்கொள்ள மத்திய அரசு முன்வர வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மதுரை மண்டல பொதுக்குழு கூட்டம், சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நடைபெற்றது. இதில் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நகராட்சி, பேரூராட்சி, அறநிலையத்துறை ஆகியவற்றுக்கு சொந்தமான கட்டடங்களில் இயங்கும் கடைகளுக்கான வாடகை பலமடங்கு அதிகரித்துள்ளது. இதை குறைக்க மாநில அரசு முன்வர வேண்டும் என கோரிக்கை வைத்த அவர், வணிக கட்டடங்களுக்கு அதிக வரி விதிக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால், பெட்ரோல் – டீசல் விலையும் உயரும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, டீசல் – பெட்ரோல் விலை உயராமல் மத்திய அரசு பார்த்துக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.