இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 29 தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டு
சென்னை அழைத்துவரப்பட்டனர்.
தமிழகத்தின் ராமேஸ்வரம்,நாகப்பட்டினம், காரைக்கால், ஆகிய பகுதிகளைச் சேர்ந்த
29 மீனவர்கள் கடந்த ஜனவரி மாதம் ஆம் 27 தேதி நல் இரவு கடலில் மீன் பிடித்துக்
கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்து
பிடித்தனர்.அதோடு மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்து படகு
மற்றும் மீன் வலைகளை பறிமுதல் செய்தனர் அதன்பின் 29 மீனவர்களையும் இலங்கை
அழைத்து சென்று சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க
வேண்டுமென அவர்கள் குடும்பத்தினர் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர் இதனால்
தமிழக முதல்வர் மத்திய அரசு வெளியுறவுத் துறை மூலமாக தமிழக மீனவர்களை
விடுவிக்க நடவடிக்கை எடுத்தனர்.

இதன் மூலம் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 29 மீனவர்களையும் இலங்கை
நீதிமன்றம் விடுதலை செய்தது. இதையடுத்து இலங்கையில் உள்ள இந்திய தூதரக
அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். தூதரக அதிகாரிகள் 29 மீனர்வகளுக்கும்
மருத்துவ பரிசோதனை செய்தனர் மேலும் 14 நாட்கள் தனிமைப்படுத்தினர்.
இதன் பின்பு மீனவர்களுக்கு பாஸ்போர்ட் இல்லாததால் இந்திய தூதரக அதிகாரிகள்
எமர்ஜென்ஸி சர்டிபிகேட் வழங்கி 29 மீனவர்களையும் நேற்று இரவு விமானம் மூலம்
இலங்கையில் இருந்து புறப்பட்டு இன்று அதிகாலை சென்னை அழைத்துவரப்பட்டனர்.
சென்னை வந்த 29 மீனவர்களையும் தமிழக அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் மீன்வளத்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்த வாகனம் மூலம் மீனவர்கள்
அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.







