முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியது

ஐந்து மாநில சட்டசபைத் தேர்தலின் வாக்கு எண்ணும் பணி தொடங்கியுள்ளது

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தல் மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.

தமிழ்நாட்டில் 234 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 72.81 சதவீத வாக்குகள்பதிவாகி இருந்தன. வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. அங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, மூன்றடுடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தேர்தலில் பதிவான வாக்குகள் 75 மையங்களில் எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணும் பணிகளில் சுமார் 16 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். இவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ஊழியர்கள்அனைவருக்கும் முகக்கவசம், பாதுகாப்பு உடை போன்றவை வழங்கப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணிக்கை 8 மணிக்குத் தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சுற்று வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டதும் அடுத்த 30 நிமிடங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். முன்னணி நிலவரம் காலை 11 மணிக்கு தெரிந்துவிடும். தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் என்பது பிற்பகலில் தெரிந்து விடும்.

Advertisement:
SHARE

Related posts

தொடரும் அதி கனமழை: 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

Halley Karthik

முதலமைச்சராகப் பதவியேற்றார் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்!

Halley Karthik

பள்ளி கட்டட விபத்து; 3 பேர் கைது

Saravana Kumar