திமுக தலைவர்களின் செல்போன் ஒட்டுக்கேட்பு… தலைமை தேர்தல் அதிகாரியிடம் ஆர்.எஸ்.பாரதி புகார்!

திமுக தலைவர்களின் செல்போன்களை அமலாக்கத்துறை,  வருமான வரித்துறை மற்றும் சிபிஐ ஒட்டுக்கேட்பதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார்.  தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக வரும் 19-ம்…

திமுக தலைவர்களின் செல்போன்களை அமலாக்கத்துறை,  வருமான வரித்துறை மற்றும் சிபிஐ ஒட்டுக்கேட்பதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார். 

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது.  வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறுகிறது.  இன்னும் தேர்தலுக்கு இரண்டு  நாட்களே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.  இதனால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில் திமுக தலைவர்கள்,  வேட்பாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள்,  அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் செல்போன்களை அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மற்றும் மத்திய புலனாய்வு அமைப்புகள் ஒட்டுக் கேட்பதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.