இதுவரை தடுப்பூசி எடுக்காதவர்கள் உடனடியாக எடுக்க வேண்டும்- ஸ்டாலின் வலியுறுத்தல்!

இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின், இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள், உடனடியாக போட்டுக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த மார்ச் 9ஆம்…

இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின், இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள், உடனடியாக போட்டுக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த மார்ச் 9ஆம் தேதி முதல் தவணை கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார். இந்நிலையில் இன்று சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இரண்டாம் தவணை தடுப்பூசியையும் செலுத்திக்கொண்டார்.

இதுகுறித்த அவர் தனது ட்விட்டரில் தெரிவித்ததாவது, “இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் உடனடியாக போட்டுக் கொள்ளவும், வேறு உடல் பாதிப்பு உள்ளவர்கள் எனில் தங்கள் மருத்துவரை கலந்தாலோசனை செய்துவிட்டு தடுப்பூசி எடுத்துக் கொள்ளவும்.” என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.