முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தொழில் வளர்ச்சிக்கு சிறப்பு செயல்திட்டம் வகுக்கப்படும் – மு.க. ஸ்டாலின்

திமுக ஆட்சி அமைந்தவுடன் தொழில் வளர்ச்சிக்கு சிறப்பு செயல்திட்டம் வகுக்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பள்ளிக்காட்டுப்புதூர் பகுதியில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், டாலர் சிட்டியாக இருந்த திருப்பூர், தற்போது டல் சிட்டியாக மாறியுள்ளது எனக் கூறினார்.

தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படவில்லை என்றும் அவர் சாடினார். மேலும், தொழில் வளர்ச்சி, பின்னலாடை உற்பத்தியில் திருப்பூர் பின்தங்கியிருப்பதற்கு மத்திய-மாநில அரசுகள் காரணம் என அவர் குற்றம்சாட்டினார். திமுக ஆட்சி அமைந்தவுடன் தொழில் வளர்ச்சிக்கு சிறப்பு செயல்திட்டம் வகுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

Advertisement:

Related posts

கொரோனா தடுப்பூசிகள் வீணாக்கப்பட்டது ஏன்? மு.க.ஸ்டாலின்

Ezhilarasan

ரஜினி- கமல் கூட்டணி : சீமான் கருத்து

Niruban Chakkaaravarthi

துணை முதல்வராக இருந்தபோது ஸ்டாலின் செய்தது என்ன? – முதல்வர் கேள்வி

Saravana Kumar