திராவிட கொள்கையை காப்பாற்றும் போர் தற்போது நடந்து கொண்டிருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மு.க ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது அவர் கூறிய திட்டங்களை அப்போதைய மத்திய அரசு செயல்படுத்தியதாகக் கூறினார்.
தற்போது ஈழ தமிழர்களுக்கு அதிமுக அரசு துரோகம் செய்து வருவதாக ஸ்டாலின் குற்றம்சாட்டினார். திமுக இந்து மதத்துக்கு எதிரான கட்சி அல்ல எனத் தெரிவித்த அவர், திமுக ஆட்சிக்கு வந்தால் ஆன்மிக பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.







