மத நல்லிணக்க கொள்கைகளை நாடு முழுவதும் செயல்படுத்த, திமுக தகவல் தொழில் அணியை இந்தியா முழுவதும் விரிவுபடுத்தும் பணி மேற்கொள்ளப்படுகிறது என டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
திமுக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் அரசின் சாதனைகளை இந்திய அளவில் எடுத்துச்செல்வதற்கு முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. எனவே, திராவிட இயக்கத்தின் சமூகநீதி மத நல்லிணக்கக் கொள்கைகள் நாடு முழுவதும் பரவிட வேண்டிய தேவையினைக் கருத்தில் கொண்டும், இந்திய ஒன்றியத்தின் அனைத்து மாநிலங்களிலும் தகவல் தொழில்நுட்பஅணியின் செயல்பாட்டினை விரிவுபடுத்தும் பணி மேற்கொள்ளப்படுகிறது.
எனவே, கட்சி அமைப்புகள் உள்ள மாநிலங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்ப அணிக்கான ஒருங்கிணைப்பாளர்கள், துணை ஒருங்கிணைப்பாளர்களைப் பரிந்துரைக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். தலைமைக் கழகத்தின் ஒப்புதல் பெற்று, அந்தந்த மாநில கழகத் தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் அறிவிக்கப்படுவார்கள். முதற்கட்டமாக, புதுச்சேரி மாநில கழகத் தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் தேர்வு செய்யப்படும் பணி நிறைவு பெற்றுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, இந்திய ஒன்றியத்தின் அனைத்து மாநிலங்களிலும் கொள்கைப் பற்றும் சமூக வலைத்தள செயல்பாடுகளில் ஆர்வமும் கொண்ட தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் விரைவில் நியமிக்கப்பட இருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மண்டல பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மண்டல பொறுப்பாளர்கள் மற்றும் அந்தந்த மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களின் விவரங்கள் வருமாறு:
சென்னை மண்டல பொறுப்பாளர் சி.எச்.சேகர் : அவருக்குட்பட்ட மாவட்டங்கள் சென்னை கிழக்கு, சென்னை தெற்கு, சென்னை மேற்கு, சென்னை வடக்கு, சென்னை வடகிழக்கு, சென்னை தென் மேற்கு, திருவள்ளூர் வடக்கு, திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மத்திய.
காஞ்சி மண்டல பொறுப்பாளர் ஏ.தமிழ்மாறன் : காஞ்சிபுரம் தெற்கு, காஞ்சிபுரம் வடக்கு, விழுப்புரம் மத்தியம், விழுப்புரம் வடக்கு.
சேலம் மண்டல பொறுப்பாளர் டாக்டர். ஏ.கே. தருண் : தருமபுரி மேற்கு, தருமபுரி கிழக்கு, கள்ளக்குறிச்சி தெற்கு, கள்ளக்குறிச்சி வடக்கு, திருவண்ணாமலை தெற்கு, திருவண்ணாமலை வடக்கு, சேலம் மத்தியம், சேலம் மேற்கு, சேலம் கிழக்கு, கூடுதல் பொறுப்பாக நாமக்கல் கிழக்கு மற்றும் நாமக்கல் மேற்கு.
வேலூர் மண்டல பொறுப்பாளர் எஸ்.டி இசை : கிருஷ்ணகிரி கிழக்கு, கிருஷ்ணகிரி மேற்கு, வேலூர் மத்தியம், வேலூர் கிழக்கு, வேலூர் மேற்கு.
தஞ்சை மண்டல பொறுப்பாளர் பி.எம். ஸ்ரீதரன் : தஞ்சை வடக்கு, தஞ்சை மத்தியம், தஞ்சை தெற்கு, நாகை தெற்கு, நாகை வடக்கு, கடலூர் மேற்கு, கடலூர் கிழக்கு, திருவாரூர்.
திருச்சி மண்டல பொறுப்பாளர் பி.கேசவன் : அவருக்குட்பட்ட கழக மாவட்டங்கள் கரூர், திருச்சி தெற்கு, திருச்சி வடக்கு. திருச்சி மத்தியம், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை வடக்கு, புதுக்கோட்டை தெற்கு. கூடுதல் பொறுப்பு: கன்னியாகுமரி கிழக்கு. மற்றும் கன்னியாகுமரி மேற்கு.
மதுரை மண்டல பொறுப்பாளர் ச.பிரபு : திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல் மேற்கு, மதுரை மாநகர், மதுரை தெற்கு, மதுரை வடக்கு, தேனி தெற்கு, தேனி வடக்கு.
கோவை மண்டல பொறுப்பாளர் ஏ. தமிழ்மறை : கோவை மாநகர், கோவை வடக்கு, கோவை தெற்கு, நீலகிரி, கூடுதல் பொறுப்பாக திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு, ஈரோடு வடக்கு, ஈரோடு தெற்கு.
முகவை மண்டல பொறுப்பாளர் எம்.விஜய கதிரவன் : இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் வடக்கு, விருதுநகர் தெற்கு, தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு, கூடுதல் பொறுப்பாக தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு, திருநெல்வேலி கிழக்கு, திருநெல்வேலி மாநகர் ஆகிய மாவட்டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.









