முக்கியச் செய்திகள் இந்தியா

தீவிரவாதிகளுக்கு இடையிலான சண்டையில் காயமடைந்த ஜூம் மோப்ப நாய் உயிரிழப்பு

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடைபெற்ற போரில் துப்பாக்கி குண்டு பாய்ந்து சிகிச்சை பெற்று வந்த ராணுவ மோப்ப நாய் ஜூம், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

 

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அனந்த்நாக், கோகர்நாக்கில் தீவிரவாதிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே துப்பாக்கி சண்டை ஏற்பட்டது. அப்போது, களத்தில் இருந்த ஜூம் என்ற ராணுவத்தை சேர்ந்த மோப்ப நாய் அந்த சண்டையில் இடம் பெற்றிருந்தது. அதில், தீவிரவாதிகளை அடையாளம் காட்டி அவர்களை பாய்ந்து பிடித்து துணிச்சலாக உதவியபோது, தீவிரவாதிகள் ஜும்மை துப்பாக்கியால் சுட்டனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதில் இரண்டு தோட்டாக்கள் ஜூம் மீது பாய்ந்ததால், அது பலத்த காயமடைந்தது. பின்னர் ஜூம், ஸ்ரீநகரில் உள்ள 54 அட்வான்ஸ் ஃபீல்ட் கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில், அறுவை சிகிச்சை முடிந்து நலமாக இருந்த நிலையில், ஜூம் நேற்று திடீரென உயிரிழந்தது.

ஜூம் துணிச்சலாக செயல்பட்டு தீவிரவாதிகள் மீது பாய்ந்து அவர்களின் போர் நடவடிக்கைகளை தடுத்த வீடியோ நேற்று இணையதளங்களில் பரவி வந்தது. ராணுவ வீரர்களுக்கு உதவியாக இருந்த ஜூம், தீவிரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜூம் செயல்பட்ட விதத்தால் பெறும் சேதம் தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பிரதமர் – ஆளுநர் சந்திப்பில் பேசப்பட்டது என்ன? ஆளுநர் மாளிகை

Niruban Chakkaaravarthi

மேட்டூர் அணைக்கு வெடிகுண்டு மிரட்டல்; முதியவர் கைது

EZHILARASAN D

சென்னையில் முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து 4.4 லட்சம் அபராதம் வசூல்!

Halley Karthik