சென்னையில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 8 வது லீக் ஆட்டத்தில் சென்னை அணி மற்றும் பெங்களூரு அணிகள் மோதவுள்ளன.
11 அணிகள் பங்கேற்றுள்ள 9-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிகள் சென்னை, கொச்சி, பெங்களூரு, மும்பை உள்பட 11 நகரங்களில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் 2 முறை மோத வேண்டும். இந்த லீக் சுற்று முடிவில் டாப் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.
இந்நிலையில் சென்னை நேரு விளையாட்டு அரங்கில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 8 வது லீக் ஆட்டத்தில் 2 முறை சாம்பியன்சிப் பட்டம் வென்ற அனிருத் தபா தலைமையிலான சென்னை அணி மற்றும் முன்னாள் சாம்பியன்சிப் பட்டம் வென்ற சுனில் சேத்ரி தலைமையிலான பெங்களூரு அணிகள் மோதவுள்ளன.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 சீசன் போட்டிகள் கோவாவில் மட்டுமே நடந்தது. தற்போது மீண்டும் சூழல் பழைய நிலைமைக்கு திரும்பி போட்டிகள் உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் நடைபெறுகிறது. சென்னையில் 2½ ஆண்டுக்கு பிறகு மீண்டும் ஐ.எஸ்.எல். போட்டிகள் நடப்பது கால்பந்து ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக கவுகாத்தியில் நேற்றிரவு நடந்த லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஐதராபாத் எப்.சி. 3-0 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட்டை வீழ்த்தியது. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்வது குறிப்பிடத்தக்கது.







