“உதயநிதியை முதல்வராக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் திமுக செயல்படுகிறது” – நயினார் நாகேந்திரன்!

உதயநிதியை முதல்வராக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் திமுக செயல்படுகிறது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியில் பாஜக சார்பில் ‘மோடி முகாம்’ நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்ட தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியார்களை சந்தித்து பேசினார். அப்போது, “புரட்சி தலைவர் எம்ஜி ஆரும், மோடியும் ஒரே சிந்தனையை கொண்டவர்கள்.

திமுகவிடம் ஆட்சியில் பங்கு வேண்டும் என காங்கிரஸ் கேட்கிறது. ஆனால் திமுக இல்லை என்கிறது. அதே வேளையில் பாஜக அதிமுகவிடம், ஆட்சியில் பங்கு கேட்காது. 525 பொய்களை கூறி திமுக தற்போது ஆட்சியில் இருக்கிறார்கள்.

பெண்களுக்காக தனி கவனம் செலுத்துகிறது மத்திய அரசு. தமிழ் மொழிக்கும் தமிழக மக்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பவர் மோடி. உதயநிதியை முதல்வராக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் அவர்கள் செயல்படுகிறார்கள். தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிக இடம்பெறுமா என்ற கேள்விக்கு பதிலளித்தவர், பொறுத்திருந்து பாருங்கள். அமித்ஷா வந்து சென்றவுடன் உங்களுக்கு பதில் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.