நகைகளை வைத்து பயிர் கடன்கள் பெற்ற விவசாயிகளும் பயிர் கடன் தள்ளுபடி திட்டத்தில் பலன் பெறுவார்கள்! – அமைச்சர் செல்லூர் ராஜு

நகைகளை வைத்து பயிர் கடன்கள் பெற்ற விவசாயிகளும் பயிர் கடன் தள்ளுபடி திட்டத்தில் பலன் பெறுவார்கள் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மதுரை பைக்காரா மேட்டுத்தெருவில் புதிய சாலைக்கான பூமி பூஜை…

நகைகளை வைத்து பயிர் கடன்கள் பெற்ற விவசாயிகளும் பயிர் கடன் தள்ளுபடி திட்டத்தில் பலன் பெறுவார்கள் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

மதுரை பைக்காரா மேட்டுத்தெருவில் புதிய சாலைக்கான பூமி பூஜை நிகழ்வில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜு பங்கேற்றோர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 10 ஆண்டுகளில் ஒரு கோடியே 6 லட்சம் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன்கள் வழங்கப்பட்டு உள்ளதாக கூறினார். 2016 ஆம் ஆண்டு தேர்தல் அறிவிக்கையில் சொல்லப்பட்டது போல விவசாயிகளுக்கு பயிர் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

2006 ஆம் ஆண்டில் திமுக ஆட்சி காலத்தில் குறைந்த அளவே பயிர் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக தெரிவித்த செல்லூர் ராஜூ, முதல்வரின் இந்த நடவடிக்கையால் மு.க.ஸ்டாலின் என்ன செய்வது என தெரியாமல் தவிப்பதாகக் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply