மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை திமுக அரசு நிறைவேற்றவில்லை – இபிஎஸ் குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில் வந்த பின்னர் மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை நிறைவேற்றவில்லை என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.   திருச்சியில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு உரையாற்றினார்.…

திமுக ஆட்சியில் வந்த பின்னர் மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை நிறைவேற்றவில்லை என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

 

திருச்சியில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், அதிமுக ஏறத்தாழ 30 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த கட்சி என்றார். எம்ஜிஆர், ஜெயலலிதா 30 ஆண்டு காலம் ஆட்சி புரிந்து சிறந்த அடித்தளத்தை அமைத்து தந்தனர். திமுக ஆட்சி பொறுப்பேற்று 15 மாத காலமாகிறது.

 

தமிழ்நாட்டில் ஏதாவது திட்டத்தினை கொண்டு வந்திருக்கிறார்களா? அதிமுக காலத்தில் முடிவற்ற பணிகளை தற்போது திமுகவினர் தொடங்கி வைக்கின்றனர். திமுக எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. ஆனால் திட்டங்கள் அனைத்தும் முடங்கியுள்ளதாக மு.க.ஸ்டாலின் கூறுகிறார். அதிமுக ஆட்சி காலத்தில் திருச்சியில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் 385 கோடி ரூபாய் செலவில் புதிய பாலம் கட்டப்பட்டது. அதேபோல சத்திரம் பேருந்து நிலையம் கட்டப்பட்டது. திருச்சி ஓடத்துறை பாலம் ரூபாய் 30 கோடியில் கட்டப்பட்டது. இது போன்ற 17 திட்டங்கள் ஜெயலலிதா காலத்தில் நிறைவேற்றப்பட்டது. அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வந்த திட்டங்களை திமுக தான் கொண்டிருந்ததாக மார்தட்டி கொள்கிறது என குற்றம்சாட்டினார்.

82 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ள அரிஸ்டோ பால பணிகளை உடனடியாக நிறைவு செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். ஆட்சி பொறுப்பேற்று 15 மாதம் கடந்தும் என்ன செய்துள்ளீர்கள்? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். மக்களுக்கு நன்மை பயக்கும் என்ற திட்டத்தையும் திமுக அரசு செய்யவில்லை.

 

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனாவில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், திருச்சி மாவட்டத்தில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகின்றனர். தொழிற்சாலையில் கடும் மின் கட்டண உயர்த்தப்பட்டுள்ளது. குடும்பத் தலைவிக்கு மாதந்தோறும் ரூபாய் 1000 என நிறைவேற்ற முடியாத திட்டங்களை திமுக அரசு அறிவித்துள்ளது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.